வரலாறு

கடந்து வந்த பாதை

1971

 • ‘கலை ஆரம்’ எனும் கலைநிகழ்ச்சி படைக்கப்பட்டது.

1972

 • உல்லாசப் பயணம் பொங்கோல் விடுமுறை விடுதியில் மேற்கொள்ளப்பட்டது.
 • ‘கல்யாணமாம் கல்யாணம்’ நகைச்சுவை நாடகம் விக்டோரியா அரங்கில் படைக்கப்பட்டது. இதன் மூலம் சுங் ஹூவா இலவச மருத்துவமனைக்கு   5000 வெள்ளி நிதி வழங்கியது.

1973

 • விக்டோரியா அரங்கில் ‘அதுதான் ரகசியம்’ நாடகம் அரங்கேற்றப்பட்டது.
 • கம்போங் தெங்கா விடுமுறை விடுதியில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.  

1974

 • கலைப்பித்தர் கழகம், புக்கிட் பாஞ்சாங் இளைஞர் கலாசார மன்றம், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் மூன்றும் இணைந்து தமிழ்ப் புத்தாண்டுக் கலையிரவு நடத்தின.
 • கலைப்பித்தர் கழகத்துடன் இணைந்து சாங்கி விடுமுறை விடுதியில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
 • ‘கல்யாணமாம் கல்யாணம்’ மீண்டும் விக்டோரியா அரங்கில் படைக்கப்பட்டது.

1975

 • ‘கல்யாணமாம் கல்யாணம்’ நாடகத்தை செம்பவாங் ஸ்ரீ நாராயண மிஷன் மண்டபத்தில் மீண்டும் அரங்கேற்றியது.
 • ‘நாடக இரவு 1975’ எனும் நிகழ்ச்சி விக்டோரியா அரங்கில் நடத்தப்பட்டது.
 • செந்தோசாவில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

1976

 • ‘அலையும் ஆத்மா’ எனும் நாடகம் விக்டோரியா அரங்கில் அரங்கேற்றப்பட்டது.
 • செயிண்ட் ஜான்ஸ் தீவில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

1977

 • விக்டோரியா அரங்கில் ‘முக்கனி விருந்து’ கலை நிகழ்ச்சி இரு தினங்களுக்குப் படைக்கப்பட்டு ஒரு நாள் வசூலான 1003 வெள்ளியை ஜூரோங் ஸ்ரீ முருகன் கோவில் கட்டட நிதிக்கு வழங்கப்பட்டது.
 • தேசிய தின விழாவில் பங்கு கொண்டது.
 • செயிண்ட் ஜான்ஸ் தீவில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
 • இசை, நடன வகுப்புக்களை ஆரம்பித்தது.

1978

 • ‘உயர்ந்த உள்ளம்’ நாடகம் விக்டோரியா அரங்கில் அரங்கேற்றம் கண்டது.
 • தேசிய அரங்கில் கலை நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
 • சிறந்த உள்ளூர் தமிழ் கலைஞர்களைத் தேர்வு செய்து பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.

1979

 • ‘காலமெனும் சிற்பி’ நாடகம் அரங்கேற்றப்பட்டது.

1980

 • ‘மனக் கண்ணாடி’ என்னும் நாடகம் மேடையேற்றப்பட்டது.

1981

 • ‘சின்னஞ் சிறுசுகள்’ என்ற நாடகம் அரங்கேற்றம் கண்டது.

1982

 • நாடக விழாவில் பங்கு கொண்டு ‘நீரில் பூத்த நெருப்பு’ எனும் நாடகத்தை அரங்கேற்றி சிறந்த நாடகத்துக்கான பரிசும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதும் கிடைத்தது.

1983

 • ‘குடும்பத்தில் குழப்பங்கள்’ எனும் நாடகத்தை நாடக விழாவில் படைத்து சிறந்த நாடகத்துக்கான விருது பெற்றது.

1984

 • சிறந்த தயாரிப்புக்கான் விருதை வென்றது ‘கோயில் கோபுரம்’ எனும் நாடகம். அரசு நடத்திய நாடக விழாவில் படைக்கப்பட்டது.

1985

 • அரசு நடத்திய நாடக விழாவில் சிறந்த நாடகத்துக்கான விருதை வென்றது மற்றொரு நாடகமான ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’.

1986

 • நாடக விழாவில் பங்கெடுத்து ‘நெஞ்சிலாடும் நிழல்கள்’ எனும் நாடகம்

மேடையேற்றப்பட்டது.

1987

 • ‘பகை வென்ற சோழன்’ என்ற வரலாற்று நாடகமும்,
  ‘தண்டனை’ சமூக நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

1988

 • உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கியப் பாடமாக விளங்கிய ‘கள்ளோ காவியமோ’ நாடகம் விக்டோரியா அரங்கில் மேடை ஏற்றப்பட்டது. பள்ளிப்பிள்ளைகளுக்கு சலுகை கட்டணம் வழங்கப்பட்டது.

1989

 • சிறந்த நாடகப் பரிசு பெற்ற இரு நாடகங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டன.

1990

 • சங்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை நாடக மையத்தில் கொண்டாடியது.
 • இருபது கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல்’ விருதும் கலைக்கு ஆதரவளித்த ஐவருக்கு ‘கலைக்காவலர்’ விருதும் வழங்கப்பட்டன.
 • இவர்களைப் பற்றிய தொகுப்பு புத்தகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. இவற்றை தென் கிழக்காசிய கல்வி நிலையத்தின் மேன்மைதங்கிய சகா திரு S ராஜரத்தினம் வெளியிட்டார்.

1991

 • இளைய கலைஞர்களுக்காக உலக வர்த்தக மைய அரங்கில் மேடை கண்ட நிகழ்ச்சி ‘ஆறு முதல் பதினாறு வரை’. நடிகை ரஞ்சீதா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

1992

 • உலக வர்த்தக மைய அரங்கில் மேடையேறியது ‘எங்கே போகிறோம்’ எனும் தேசிய சேவை பற்றிய நாடகம்.

1993

 • உலக வர்த்தக மைய அரங்கில் ‘இன்னிசை மழை’ எனும் கலை நிகழ்ச்சி படைக்கப்பட்டது.

1994

 • ‘காடி புதுசு ரோடு பழசு’ நாடகம் நாடக மையத்திலும் பின்னர் தாம்சன் சமூக மன்றத்திலும் அரங்கேற்றம் கண்டது.
 • ‘1936ம் ஆண்டு முதல் 1994 வரை சிங்கப்பூரின் நாடக வளர்ச்சி’ எனும் கண்காட்சி நாடக மையத்தில் 5 நாட்கள் தொடர்ச்சியாக படைக்கப்பட்டது.

1995

 • சங்கத்தின் 25ஆம் ஆண்டினை முன்னிட்டு ‘வெள்ளி மலர்ச் சோலையிலே’ எனும் கலை நிகழ்ச்ச்சியை விக்டோரியா அரங்கில் படைத்தது.
 • ‘1936ம் ஆண்டு முதல் 1994 வரை சிங்கப்பூரின் நாடக வளர்ச்சி’ எனும் கண்காட்சி தஞ்சாவூரில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைக்கப்பட்டது.

1996

 • ‘வசந்த மாலை’ எனும் கலை நிகழ்ச்சியை நாடக மையத்தில் படைத்தது.

1997

 • முதன் முதலாக ஐயாயிரம் டிரன்சிட் லிங்க் அட்டைகளை பி.யு.பி ஆடிட்டோரியத்தில் வெளியிட்டு சரித்திரம் படைத்தது சங்கம்.

1998

 • சங்கத்தின் 28ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நெப்டியுன் அரங்க சாப்பாட்டு விடுதியில் நடன விருந்து படைக்கப்பட்டது. திரு ரெ சோமசுந்தரம் மற்றும் திருமதி சுசிலா கிருஷ்ணசாமிக்கும் வாழ்நாள் சாதனை விருதுகள்  வழங்கப்பட்டு தலா ஒரு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. சுமார் 450 பேர் விருந்தில் கலந்துகொண்டனர்.

2004

 • பிரதான விழாவில் விருது பெற்ற கலைஞர்களைப் பாராட்டி கௌரவித்தது. இந்நிகழ்ச்சி உமறுப் புலவர் கல்வி மையத்தில் நடைபெற்றது.

2005

 • 35ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி 40 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் மற்றும் கலைக்காவலர் விருதுகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி  விருதுகள் வென்றவர்களைப்பற்றி புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை சுகாதார மூத்த அமைச்சர் டாக்டர் பாலாஜி சதாசிவம் வெளியிட்டார்.

2006

 • ‘இடைவெளி’ எனும் நாடகம் ராபிள்ஸ் ஹோட்டல் ஜூப்ளி அரங்கில் இரு தினங்களுக்கு மேடையேற்றப்பட்டது.
 • திரு M. K. நாராயணன் 5 வார இறுதிகளில் நாடகப்பட்டறை நடத்தினார். சுமார் 15 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2007

 • ‘ராஜராஜ சோழன்’, ‘பூனைக்கேசி 37’ எனும் ஓரங்க நாடகங்கள் படைக்கப்பட்டன.
 • 21.10.2007ல் மிகப் பிரமாண்டமான அளவில் ‘சுவடுகள்’ நாடகம் விக்டோரியா அரங்கில் படைக்கப்பட்டது. இதற்கு சிங்கப்பூர் அதிபர் S R நாதன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
 • அதே தினத்தன்று, தஞ்சொங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பெ யாம் கெங் சங்கத்தின் இணையத்தலத்தை தொடக்கி வைத்தார்.

2008

 • ‘சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு’ நூல் வெளியீடு கண்டது.

2009

 • தஞ்சையிலும் சென்னையிலும் ‘ராஜராஜ சோழன்’ ஓரங்க நாடகம் படைக்கப்பட்டது.

2010

 • இந்தோனேசியாவின் மேடான் நகரில் 40 பேர் கொண்ட கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 • கலைஞர் சங்க வரலாற்றுப் புத்தகமான கலைப்பயணம் வெளியிடப்பட்டது.
 • 25.09.2010ல் இனியவை நாற்பது நிகழ்ச்சி அரங்கேறியது.

2011

 • பிரதான விழாவில் விருது பெற்ற கலைஞர்களைப் பாராட்டி கௌரவித்தது. இந்நிகழ்ச்சி டேஸ்ட் ஆப் இந்தியா உணவகத்தில் நடைபெற்றது.

2012

 • கராவோக்கே பாட்டுத்திறன் போட்டி நடத்தப்பட்டது.

2013

 • நடிகை மனோரமாவுக்கு நினைவஞ்சலி.
 • விஸ்வநாதன் (ராமமூர்த்தி) இசை நிகழ்ச்சி மற்றும் இசையமைப்பாளர் M.S. விஸ்வநாதனுக்கு நினைவஞ்சலி.

2015

 • ‘இரு சிகரங்கள்’ எனும் கலை நிகழ்ச்சி MDIS அரங்கில் படைக்கப்பட்டது.

2016

 • தமிழ் மொழி விழாவில் பங்கேற்பு.

2017

 • 26.06.2017 அன்று திரு மணிமாறனுக்கு நினைவஞ்சலி.

2018

 • தமிழ் மொழி விழாவில் கலந்துகொண்டு ‘கண்ணன் தூது’ எனும் நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
 • மலேசியா இந்திய கலைஞர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி படைத்தது.
 • 8.12.2018 அன்று MDIS அரங்கில் நிதி திரட்ட தீபாவளி கலை நிகழ்ச்சி படைக்கப்கட்டது. இந்நிகழ்ச்சியில் ஒருவருக்கு ‘கலைச்செம்மல்’ விருதும் ஐவருக்கு ‘கலைக்காவலர்’ விருதும் வழங்கப்பட்டன.

2019

 • 17.02.2019ல் ‘ESJ சந்திரனுடன் உரையாடல்’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்நிய மரபுடைமை மையத்தில் நடைபெற்றது. சுமார் 50 கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
 • 13.04.2019 அன்று, தமிழ் மொழி விழாவில் பங்கெடுத்து ‘உணர்ச்சிகள்’ எனும் நடிப்புப் போட்டியை ஏற்பாடு செய்தது.
 • மூத்த கலைஞர் சந்திப்புகள் நடந்தன:

  10.07.2019 – திருமதி திலகா மாதவதாஸ்
  29.07.2019 – குமாரி யோகாம்பிகை
  29.08.2019 – திரு லோகநாதன்
  19.11.2019 – திரு அரூர் சபாபதி

2020

 • 30.05.2020 அன்று ‘மெய்நிகர் நட்சந்திரங்கள் 2020’ கானொளி மூலம் படைக்கப்பட்டது.
 • 20.06.2020ல் ‘சங்கத்துடன் காப்பி’ எனும் மெய்நிகர் நிகழ்ச்சி படைக்கப்பட்டது