HISTORY

1970- சங்கப் பதிவு வேலைகள் ஆரம்பம்.

1971- கலை ஆரம் நிகழ்ச்சி படைக்கப்பட்டது.

1972- உல்லாசப் பயணம் பொங்கோல் விடுமுறை விடுதியில் மேற்கொள்ளப்பட்டது. “கல்யாணமாம் கல்யாணம்” நகைச்சுவை நாடகம் விக்டோரியா அரங்கில் படைக்கப்பட்டது. சுங் ஹூவா இலவச மருத்துவமனை நிதிக்கு 5000 வெள்ளி நிதி வழங்கியது.

1973- விக்டோரியா அரங்கில் ‘அதுதான் ரகசியம்’ நாடகம் அரங்கேற்றப்பட்டது.

1974- “கல்யாணமாம் கல்யாணம்” மீண்டும் விக்டோரியா அரங்கில் படைக்கப்பட்டது. கலைப்பித்தர் கழகம், புக்கிட் பாஞ்சாங் இளைஞர் கலாசார மன்றம், சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் மூன்றும் இணைந்து தமிழ்ப் புத்தாண்டுக் கலையிரவு நடத்தின.

1975- “கல்யாணமாம் கல்யாணம்” நாடகத்தை செம்பவாங் ஸ்ரீ நாராயண மிஷன் மண்டபத்தில் மீண்டும் அரங்கேற்றியது. நாடக இரவு 75 எனும் நிகழ்ச்சி விக்டோரியா அரங்கில் நடத்தப்பட்டது.

1977- விக்டோரியா அரங்கில் முக்கனி விருந்து கலை நிகழ்ச்சி இரு தினங்களுக்குப் படைக்கப்பட்டு ஒரு நாள் வசூலான 1003 வெள்ளியை ஜூரோங் ஸ்ரீ முருகன் கோவில் கட்டட நிதிக்கு வழங்கப்பட்டது. இசை,நடன வகுப்புக்களை ஆரம்பித்ததோடு தேசிய தின விழாவில் பங்கு கொண்டது.

1978- “உயர்ந்த உள்ளம்’ நாடகம் விக்டோரியா அரங்கில் அரங்கேற்றம் கண்டது. சிறந்த உள்ளூர் தமிழ் கலைஞர்களைத் தேர்வு செய்து பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டன.

1979- கலாசார இரவு நிகழ்ச்சியைத் தேசிய அரங்கில் படைத்தது. “காலமெனும் சிற்பி’ நாடகம் அரங்கேற்றப்பட்டது.

1980- “மனக் கண்ணாடி” என்னும் நாடகம் மேடையேற்றப்பட்டது.

1981- “சின்னஞ் சிறுசுகள்” என்ற நாடகம் அரங்கேற்றம் கண்டது.

1982- நாடக விழாவில் பங்கு கொண்டு “நீரில் பூத்த நெருப்பு” எனும் நாடகத்தை அரங்கேற்றி சிறந்த நாடகத்துக்கான பரிசும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதும் கிடைத்தது.

1983- “குடும்பத்தில் குழப்பங்கள்” எனும் நாடகத்தை நாடக விழாவில் படைத்து சிறந்த நாடகத்துக்கான விருதும் பெற்றது.

1984- சிறந்த தயாரிப்புக்கான் விருதை வென்றது “கோயில் கோபுரம்” எனும் நாடகம். அரசு நடத்திய நாடக விழாவில் படைக்கப்பட்டது.

1985- சிறந்த நாடகத்துக்கான விருதை வென்ற மற்றொரு நாடகம் “சிங்கப்பூர் மாப்பிள்ளை”.

1986- நாடக விழாவில் பங்கெடுத்து மேடையேற்றப்பட்ட நாடகம் “நெஞ்சிலாடும் நிழல்கள்”.

1987- “பகை வென்ற சோழன்” என்ற வரலாற்று நாடகமும், “தண்டனை” சமூக நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

1988- உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கியப் பாடமாக விளங்கிய “கள்ளோ காவியமோ” நாடகம் விக்டோரியா அரங்கில் மேடை ஏற்றப்பட்டது.

1989- சிறந்த நாடகப் பரிசு பெற்ற இரு நாடகங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டன.

1990- சங்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை நாடக மையத்தில் கொண்டாடியது.

1991- இளைய கலைஞர்களுக்காக விக்டோரியா அரங்கில் மேடை கண்ட நிகழ்ச்சி “ஆறு முதல் பதினாறு வரை”.

1992- உலக வர்த்தக மைய அரங்கில் மேடையேறியது “எங்கே போகிறோம்” நாடகம்.

1993- உலக வர்த்தக மைய அரங்கில் “இன்னிசை மழை” எனும் கலை நிகழ்ச்சி படைக்கப்பட்டது.

1994- “காடி புதுசு ரோடு பழசு” நாடகம் நாடக மையத்திலும் தாம்சன் சமூக மன்றத்திலும் அரங்கேற்றம் கண்டது.

1995- சங்கத்தின் 25ஆம் ஆண்டினை முன்னிட்டு “வெள்ளி மலர்ச் சோலையிலே” எனும் கலை நிகழ்ச்ச்சியை விக்டோரியா அரங்கில் படைத்தது.

1996- வசந்த மாலை எனும் கலை நிகழ்ச்சியை நாடக மையத்தில் படைத்தது.

1997- ஐயாயிரம் டிரன்சிட் லிங்க் அட்டைகளை பி.யு.பி ஆடிட்டோரியத்தில் வெளியிட்டு சரித்திரம் படைத்தது.

2004- பிரதான விழாவில் விருது பெற்ற கலைஞர்களைப் பாராட்டி கௌரவித்தது.

2005- 35ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி 40 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் மற்றும் கலைக்காவலர் விருதுகள் வழங்கப்பட்டன.

2006- “இடைவெளி” எனும் நாடகம் ராபிள்ஸ் ஹோட்டல் ஜூப்ளி அரங்கில் இரு தினங்களுக்கு மேடையேற்றப்பட்டது.

2007- ராஜராஜ சோழன், பூனைக்கேசி 37 எனும் ஓரங்க நாடகங்களுடன், 21.10.2007ல் மிகப் பிரமாண்டமான அளவில் “சுவடுகள்” நாடகம் விக்டோரியா அரங்கில் படைக்கப்பட்டது.

2008- “சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு” நூல் வெளியீடு கண்டது.

2009- தஞ்சையிலும் சென்னையிலும் “ராஜராஜ சோழன்” ஓரங்க நாடகம் படைக்கப்பட்டது.

2010- இந்தோனேசியாவின் மேடான் நகரில் 40 பேர் கொண்ட கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலைஞர் சங்க வரலாற்றுப் புத்தகமான கலைப்பயணம் வெளியிடப்பட்டது. 25.09.2010ல் இனியவை நாற்பது நிகழ்ச்சி அரங்கேறியது.

2010 to 2016- கராவோக்கே பாட்டுத்திறன் போட்டி, விஸ்வநாதன் –ராமமூர்த்தி இசை நிகழ்ச்சி, M.S. விஸ்வநாதன், மனோரமா நினைவஞ்சலி, தமிழ் மொழி விழாவில் பங்கேற்பு.