ABOUT US

1970 ஆம் ஆண்டு, உள்ளூர் கலைஞர்களில் சிலர், நடிகர்களுக்கென ஒரு சங்கம் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணி, குழுவொன்று அமைத்து, சிங்கப்பூர் இந்திய நடிகர் சங்கம் எனப் பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்து அரசாங்கத்தின் சங்கங்களின் பதிவகத்தில் பதிவு செய்யச் சென்றனர்.

ஒரு சிலரோ கூத்தாடிகளுக்கு சங்கமா என் கேலி செய்தனர். இருப்பினும் எல்லாத் தடைகளையும் மீறி இறுதியில் “சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம்” என 1971 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின் சங்கம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனும் நல்ல நோக்கத்தில் சுறுசுறுப்பான செயலவை முதன் முதலில் “கலை ஆரம்” கலை நிகழ்ச்சியைப் படைத்து வெற்றி கண்டது.

தொடர்ந்து விக்டோரியா அரங்கில் “கல்யாணமாம்கல்யாணமாம்” நாடகம். இந்த நாடகம் சிங்கப்பூரில் ஆறு முறை அரங்கேற்றம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல வெற்றி நாடகங்களைப் படைத்த சங்கம் அரசாங்கம் நடத்திய நாடக விழாவில் பங்கு கொண்டு பல வெற்றிக் கோப்பைகளைத் தட்டிச் சென்றது.

1980களின் இறுதியில் புகழின் உச்சியில் இருந்த சங்கம் 1990களில் சில ஆண்டுகள் தொய்வு கண்டு தற்போது மீண்டும் சுறுசுறுப்பான செயலவையினால் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

எண்பத்தேழு ஆயுள் உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் தொடர்ந்து செயல்பட இளையர்களை எதிர்பார்க்கிறது.